வாசுதேவநல்லூரை அடுத்து சுப்ரமணியபுரத்தில் அமைந்துள்ள வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் “பல்கலை ராணிகளின் பல்வகைத் தானப் பொங்கல்” என்ற தலைப்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினர். தானியம், பணமுடிப்பு, கல்விசார்ந்த பொருட்கள், பழவகைகள், காய்கறிகள், திண்பண்டங்கள், ஆடை, ஆபரணப் பொருட்களை ஒவ்வொரு துறை சார்ந்த ராணிகள் சீர் வரிசைத் தட்டுகளுடன் அணிவகுத்து வந்தனர். அணி வகுப்பை கல்லூரி சேர்மேன் வெள்ளத்துரைப் பாண்டியன் மற்றும் நிர்வாக இயக்குனர் வெள்ளத்தாய் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அவரவர் துறைக்காக சிறு வீடுகள் கட்டி அலங்கரித்து இருந்தனர். நிர்வாகச்சீர் ,நிர்வாகச் சிறு வீடு பொங்கல் இடல் இவைகளும் இடம் பெற்றன.
பொங்கல் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கொண்டு வந்த சீர் வரிசைப் பொருட்களை, முதல்வர் ஈஸ்வரன் முதல் கடைநிலைப் பணியாளர் வரை அனைவரும் பொங்கல் சீர் பெற்றனர். 9 வகைப் பொங்கல் பானைகளைச் சுற்றி பேராசிரியப் பெருமக்கள் கும்மியடித்தும் குலவையிட்டும் நடனமாடினர். இறுதியாக அனைவருக்கும் பொங்கல் கொடுத்து விருந்துண்டு மகிழ்ந்து, பொங்கல் விழா இனிதே நடந்தேறியது. விழா ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர், உதவிமுதல்வர் சாரதா நெல்லை நாயகி, நிர்வாக அலுவலர் காளித்துரை பேராசிரியர்கள், ராணியர், மற்றும் பிற பணியாளர்கள் சிறப்புற செய்திருந்தனர்.