வியாசா கல்லூரியில் கார்கில் போர் வெற்றி வெள்ளி விழா தினம் அனுசரிக்கப்பட்டது. சுப்ரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலமாக கார்கில் போர் வெற்றி வெள்ளிவிழா தினமாக இன்று26/07/24 கொண்டாடப்பட்டது இந் நிகழ்வில் கார்கில் போர் குறித்து நிர்வாக அதிகாரி டாக்டர் உ காளித்துரை ஐயா பாடிய பாடல் ராணியருக்கு காண்பிக்கப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினராக முன்னாள் இராணுவ வீரர்களாகிய திரு. தோப்பையா பாண்டியன் மற்றும் திரு. ராமசாமி கலந்துகொண்டனர். கல்லூரியின் சார்பாக நினைவு பரிசு வழங்கி கல்லுரிச் சேர்மன் ஐயா முனைவர் திரு. ச வெள்ளத்துரைப் பாண்டியன் அவர்கள் தலைமை வகித்து மற்றும் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் இராணுவ வீரர்களாகிய திரு தோப்பையா பாண்டியன் மற்றும் திரு .ராமசாமி ஆகியோர் கார்கில் போர் குறித்து சிறப்புரை ஆற்றினர். முதல்வர் முனைவர் ஆர். ஈஸ்வரன் நிர்வாக அலுவலர் டாக்டர் உ.காளித் துரை, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் திருமதி ச.சுஜாதா துணைமுதல்வர் ச.சாரதா நெல்லை நாயகி தமிழ்த்துறை தலைவி முனைவர் ச. முத்துலட்சுமி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் மற்றும் பிற பணியாளர்கள் கலந்து கொண்டனர் தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவி எஸ். அம்மணி நிகழ்வினை தொகுத்து வழங்கினார் செல்வி எஸ். மகேஷ் வரவேற்புரை வழங்கினார் மற்றும் செல்வி எம். ஐஸ்வர்யா நன்றி உரை கூறினார் விழா இனிதே நடந்தேறியது