வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை சங்கப்பலகை சார்பாக 20/07/2024 அன்று
சனிக்கிழமை ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
தலைப்பு : ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’
சிறப்பு விருந்தினர்: முனைவர்.சி.தேவி
பட்டிமன்ற தொலைக்காட்சி பேச்சளார்
உதவிப்பேராசிரியர்
எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரி,சிவகாசி.
முன்னிலை : சேர்மன் ஐயா, கல்லூரி முதல்வர் மற்றும்
நிர்வாக அலுவலர்.
நிகழ்ச்சி தமிழ்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது. வரவேற்புரை திருமதி அ.டெய்சி தமிழ்த்துறை, உதவி பேராசிரியர் வழங்கினார். கல்லூரியின் சேர்மன் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினரை சிறப்பு செய்து, நினைவு பரிசு வழங்கினார்கள். தமிழ்த்துறை மாணவிகளுக்கு தமிழின் பால் பற்றுதலை ஏற்படுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு கொள்ளும் வகையிலும் சிறப்பு விருந்தினரின் சிறப்புரை அமைந்திருந்தது. வாழ்த்துரையை நிர்வாக அலுவலர் வழங்கினார். நிறைவாக முனைவர் ப.ஜெனிபர் நன்றியுரை வழங்கினார். கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.