இந்நிகழ்வினை கல்லூரியின் தலைவர் முனைவர். ச.வெள்ளத்துரைபாண்டியன் துவங்கி வைத்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவ கேந்திரா திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் வாசுதேவநல்லூர் துணைஅஞ்சல் நிலைய அதிகாரி கணேசன், முனைவர் எஸ்.பாலச்சந்திரன், நூலகர், திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம், எம். மாலிக் முகம்மது அலி மற்றும் முனைவர்.ஏ.பாத்திமா பாப்புலர்ஸ் இளையோர் மன்றம் திருநெல்வேலி ஆகியோர்கள் கலந்து கொண்டு ‘எனது மண் எனது தேசம்”என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றி, மாணவியர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர். ஆர்.ஈஸ்வரன், ‘அமிர்த கலச யாத்திரை” குறித்த உறுதிமொழியைக் கூற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவியர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். 20 கிராமங்களிலிருந்து மாணவியர்கள் எடுத்து வந்த வளமான மண்ணினை கல்லூரியின் தலைவர் பெற்றுக் கொண்டு அதனை சிறப்பு விருந்தினாிடம் ஒப்படைத்தார். நாட்டுநலப்பணித் திட்டத்தில் உள்ள 50 மாணவியருக்கு நேரு யுவ கேந்திரா டி.ஷர்ட் வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட 840 மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் தென்காசி நேரு யுவ கேந்திரா அமைப்பின் மூலமாக வழங்கினார்கள். மண் சார்ந்த விழிப்புணர்வு குறித்த பேரணியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.