07.10.2023, சனிக்கிழமையன்று சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டுநலப்ணித்திட்டமும் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு – மீட்புபணிகள் துறையும் இணைந்து தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாணவியர்களிடையே கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 110 வியாசா கல்லூரி ராணிகள் கலந்து கொண்டனர். வாசுதேவநல்லூர் தீயணைப்பு மீட்புபணித்துறை நிலையஅலுவலர் உயர்திரு. கருப்பையா அவர்கள் மாணவியர்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து ஆலோசனை வழங்கினார். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், முதல்வர் ஆர். ஈஸ்வரன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். பொ. ஆவுடையம்மாள் செய்திருந்தனர்.