‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்னும் இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பத்மாவதி அவர்கள் மற்றும் வணிகவியல் பேராசிரியர், பேச்சாளர் திருமிகு அருணன் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். இதில் நம் கல்லூரி மாணவிகள் 3 பேர் வெற்றிப் பெற்றனர். மூன்று பேருக்கும் ‘பெருமிதச் செல்வி’ ‘கேள்வி நாயகி’ என்ற பெயர்களுடன் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.. நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ‘இராஜராஜசோழனின் பெருமையைப் பறைசாற்றும் காணொளியும், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்னும் சிறப்புக் காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.